மாவட்ட செய்திகள்

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை + "||" + Loss in Stock Market Investment Retired Private company employee Suicide

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
பங்குச்சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஓய்வுபெற்ற ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,

மும்பை காந்திவிலி மேற்கு புஷ்பாஞ்சலி குடியிருப்பில் வசித்து வந்தவர் விஜய் நாயக் (வயது 63). ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் விஜய் நாயக் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அவரது மகள் செல்போனில் அழைத்து உள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மகள் வேலைக்கார பெண்ணை வீட்டிற்கு சென்று பாா்க்க சொன்னார்.


இதையடுத்து வேலைக்கார பெண் வீட்டிற்கு சென்று தன்னிடம் இருந்த மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டிற்குள் விஜய் நாயக் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

உடனே போலீசார் அங்கு வந்து விஜய் நாயக்கை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில், அவர் பங்குச்சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. எனினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோட்டூர் அருகே ‘கஜா’ புயலில் சாய்ந்த டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கோட்டூர் அருகே ‘கஜா’ புயலில் சாய்ந்த டிரான்ஸ்பார்மரை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
2. பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்: தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை நெல்லையை சேர்ந்தவர்கள்
பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையால் விரக்தி அடைந்த நெல்லையை சேர்ந்த வாலிபர், தனது தாயுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.