வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்


வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 14 Oct 2018 10:45 PM GMT (Updated: 14 Oct 2018 6:49 PM GMT)

வண்டாம்பாளையில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. இதை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகே வண்டாம்பாளையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பான விண்ணப்ப படிவம் வினியோகம் செய்தார். இதைத்தொடர்ந்து புதிதாக பெயர் சேர்க்க வந்த கல்லூரி மாணவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய குடிமகனாக இருக்கும் அனைவரும் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். புதிய வாக்காளர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று நாட்டின் நலனுக்கு உதவ வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதுவரை வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தவறியவர்கள், இந்த முறை வாய்ப்பை தவற விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நாகை கோபால் எம்.பி., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேகர், கூட்டுறவு சங்க தலைவர் தியாகராஜன், பெரும்புகளூர் ஊராட்சி கிளை செயலாளர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story