வேலூரில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


வேலூரில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2018 4:34 AM IST (Updated: 28 Oct 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்,

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூரிலும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 25–ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆஞ்சநேயர் கோவில் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 3–வது நாளாக சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் வி.செல்வம் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே சமையல் செய்து உணவு வழங்கப்பட்டது. இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

Next Story