பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 Nov 2018 4:00 AM IST (Updated: 6 Nov 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் வனத்துறை சுற்றுலா வளாகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக, தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஹரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயன், பொருளாளர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாலதொட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில், மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மொழியான தெலுங்கு, உருது மொழி வழிக்கல்விக்கான புதிய பாடப்புத்தகங்கள் இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு பணியில் பெண் ஆசிரியர்களுக்கு பணியிடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள் தேர்வு பணி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் நிலுவையில் உள்ள 21 மாத ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட தலைவர் முரளி, செயலாளர் ஹெரிப், பொருளாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நிர்வாகி வசந்தராஜா நன்றி கூறினார்.

Next Story