மாவட்ட செய்திகள்

மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது + "||" + Wine bottle Stabbed murder of a young man - Private company employee arrested

மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது

மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது
வலங்கைமான் அருகே மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே செம்மங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் அயோத்திராமன். இவருடைய மகன் கோகுல் (வயது 21). இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.


கோகுல், தீபாவளிக்கு தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் மகன் கணேசன்(35). இவர், கோகுலுக்கு சித்தப்பா உறவு முறை ஆவார். தீபாவளிக்கு முன்னதாக இரண்டு குடும்பத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உறவினர்களால் சமரசம் செய்து வைக்கப்பட்டது.

நேற்று காலை மீண்டும் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு முற்றியதால் கோகுல் மதுபாட்டிலால் கணேசனின் வயிற்று பகுதியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து சிறிது தூரம் ஓடினார்.

பின்னர் உயிருக்கு போராடி மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கோகுல், வலங்கைமான் போலீசில் ஆஜர் ஆனார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பரபரப்பு: தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - தண்டவாளத்தில் உடல் வீச்சு
சேலத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தண்டவாளத்தில் வீசப்பட்ட அவருடைய உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது
ஆவடியில் தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அருகில் படுத்து தூங்கிய அவரது மகளும் கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக குடுகுடுப்பைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது
தாய்–மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
4. என்ஜினீயரிங் மாணவர் கழுத்தை அறுத்து கொலை: காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலம்
என்ஜினீயரிங் மாணவரை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 மாத குழந்தையை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற கொடூரம் - கைதான மளிகைக்கடைக்காரர் பரபரப்பு வாக்குமூலம்
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 3 மாதமே ஆன ஆண் குழந்தையை மளிகைக்கடைக்காரர் துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.