விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும்; நிர்வாக ஆணையருக்கு மனு


விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும்; நிர்வாக ஆணையருக்கு மனு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:30 PM GMT (Updated: 12 Nov 2018 8:02 PM GMT)

விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணிகள் மேம்பட நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நியமிக்க அனுமதி வழங்குவதுடன் நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என கோரி நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் நகரசபை முன்னாள் துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

 நியமனம் விருதுநகர் நகராட்சியில் பல வருடங்களாக நிரந்தர ஆணையர் நியமிக்கப்படாத நிலையில் சமீபத்தில் ஓய்வு பெறும் நிலையில் ஆணையர் நியமிக்கப்பட்டதால் நகராட்சியின் பணிகள் முறையாக நடைபெறாத நிலை உள்ளது. எனவே விருதுநகர் நகராட்சிக்கு குறைந்த பட்சம் 3 வருடங்கள் பணிசெய்யும் அளவில் ஆணையரை நியமித்து நகராட்சி பணிகள் அனைத்தும் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் நகராட்சியில் பலமுறை முறையிட்டும் துப்புரவு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நகராட்சிகளின் மண்டல இயக்குனரே விருதுநகரில் முகாமிட்டு பிற நகராட்சிகளில் இருந்து வாகனங்களையும் பணியாளர்களையும் கொண்டுவந்து துப்புரவு பணியை செய்யவேண்டிய நிலைஏற்பட்டது. நடைமுறையில் இது சாத்தியப்பட்டாது.

நகராட்சியில் புதிதாக குப்பைவரி என்றுவசூல் செய்கிறார்கள். பிறப்பு இறப்பு சான்றிதழுக்கு தற்போது ரூ.200 வசூல் செய்யப்படுகிறது. பொதுமக்களிடம் எந்தெந்த வகையில் வசூல் செய்யலாம் என்று முனைபுடன் செயல்படும் நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணிகளில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. விருதுநகர் நகராட்சியில் 247 துப்புறவு பணியாளர்கள் பணியாற்றிவந்த நிலையில் தற்போது 100–க்கும் குறைவாகவே நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். இதுபோக சுய உதவி குழுக்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 60 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை கொண்டு நகரில் சுகாதாரத்தை மேம்படுத்த முடியாது.

தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.7 லட்சம் குப்பை வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த பணத்தில் இருந்து புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கி சுகாதார பணிகள் மேம்பட உதவிடுமாறு வேண்டுகிறேன். விருதுநகர் நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை நியமித்து நகர மக்களுக்கு பயன்படும் வகையில் நகராட்சியின் சேவை மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story