விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 9:36 PM GMT)

இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

அன்னவாசல்,

இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜோஷி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் ரெங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ரகுபதி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் சுப்பையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர் பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்க மத்திய அரசு, மாநில அரசுக்கு அதிக நிதி கொடுக்க வேண்டும், திருநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோரையாற்று பகுதியில் உள்ள பட்டா காட்டிலும் மணல் அள்ளுவததை தடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால நடவடிக்கையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தாரிடம் சேனை கருப்பையாவிடம் கொடுத்து கலைந்து சென்றனர்.

இதேபோல் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு நிவாரணம் வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் ஒன்றிய செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. 

Next Story