வளர்ப்பு மகளை கற்பழித்த ஆட்டோ டிரைவர் கைது


வளர்ப்பு மகளை கற்பழித்த ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2018 2:49 AM IST (Updated: 12 Dec 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பை வாஷி பகுதியில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் அனில் ஜாதவ்(வயது38) என்ற ஆட்டோ டிரைவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் 17 வயதில் மகள் உள்ளார்.

மும்பை, 

கடந்த 2016-ம் ஆண்டு பெண் வீட்டில் இல்லாத சமயத்தில் ஆட்டோ டிரைவர் 17 வயது வளர்ப்பு மகளை மிரட்டி கற்பழித்து உள்ளார். தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக அவர் மிரட்டி கற்பழித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அவரின் பாலியல் தொல்லையால் விரக்தி அடைந்த சிறுமி சமீபத்தில் வீட்டை விட்டு ஓடினார். இதுகுறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு விசாரித்தனர். அப்போது வளர்ப்பு தந்தை தன்னை 2 ஆண்டுகளாக கற்பழித்து வந்ததை கூறினார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வளர்ப்பு மகளை கற்பழித்து வந்த ஆட்டோ டிரைவர் அனில் ஜாதவை அதிரடியாக கைது செய்தனர்.

Next Story