மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது


மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 3:03 AM IST (Updated: 13 Dec 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள்.

பவானி,

பவானி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 2 நாட்களுக்கு முன் அவருடைய பெற்றோர் பிரசவத்துக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்கள். அப்போது அந்த பெண் திருமணம் ஆகாதவரோ? என்று டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனால் அவரிடம் விசாரித்தார்கள். அதில், அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றும், மேலும் அவருக்கு 18 வயதே ஆகிறது என்றும் தெரிந்தது. உடனே இதுபற்றி டாக்டர்கள் பவானி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்போது பாலிடெக்னிக் மாணவியான அந்த பெண்ணை அவருடைய அக்காள் கணவரே கர்ப்பமாக்கியது தெரிந்தது. அதன் விவரம் வருமாறு:–

பவானி சென்னம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். கூலிதொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவியின தங்கை 18 வயதான இளம்பெண் ஈரோட்டில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அடிக்கடி அக்காளை பார்ப்பதற்காக அக்காள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது செல்வம் அவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்து இருக்கிறார்.

அப்போது செல்வம் இளம்பெண்ணிடம், ‘உன் அக்காள் 2 குழந்தைகளையும் பெண் குழந்தைகளாக பெற்றுவிட்டார். எனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும். அதை நீ பெற்றுத்தா? என்று கேட்டுள்ளார். இதை அந்த இளம் பெண்ணும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் இளம் பெண் கர்ப்பமாகி விட்டார். இந்தநிலையில்தான் பெண்ணின் பெற்றோர் பிரசவத்துக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பவானி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 18 வயது இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக செல்வத்தை கைது செய்தார்கள்.


Next Story