கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:15 PM GMT (Updated: 13 Dec 2018 7:44 PM GMT)

கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த மாதம் நவம்பர் 28-ந் தேதி முதல் ஆன்லைன் சான்றிதழ் பதிவு செய்யும் பணியை புறக்கணித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

கிராம நிர்வாக அதிகாரிகள் அனைவருக்கும், ஒரே அரசாணை மூலம் மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். தங்களது அலுவலகங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த மாதம் நவம்பர் 28-ந் தேதி முதல் ஆன்லைன் சான்றிதழ் பதிவு செய்யும் பணியை புறக்கணித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கிராம நிர்வாக அதிகாரிகள் மூலம் வழங்கப்படும் சாதி, வருவாய், இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story