ஸ்ரீபெரும்புதூர் அருகே, தனியார் நிறுவனத்தில் ரூ.2½ லட்சம் அலுமினிய கம்பிகள் திருட்டு; 3 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூர் அருகே, தனியார் நிறுவனத்தில் ரூ.2½ லட்சம் அலுமினிய கம்பிகள் திருட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 3:15 AM IST (Updated: 16 Dec 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.2½ லட்சம் அலுமினிய கம்பிகள் திருடப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் கண்ணாடி தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் மர்ம நபர்கள் சிலர் அலுமினிய கம்பிகளை திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இதையடுத்து நிறுவன மேலாளர் மூர்த்தி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் அந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வந்த சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 35), காந்தூர் பகுதியை சேர்ந்த கோபி (43), வெல்டராக வேலை செய்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சேட்டு என்கிற சிவசக்திவேல் (35) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியது வந்தது.

இவர்கள் 3 பேரும் போலி பில் தயாரித்து நிறுவனத்தில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள அலுமினிய கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர். போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து அலுமினிய கம்பிகள், மினி டெம்போ போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story