புயல் நிவாரண நிதி வழங்குவதில் தமிழகம், புதுச்சேரியை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் மத்திய அரசு பார்க்கிறது


புயல் நிவாரண நிதி வழங்குவதில் தமிழகம், புதுச்சேரியை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் மத்திய அரசு பார்க்கிறது
x
தினத்தந்தி 15 Dec 2018 11:00 PM GMT (Updated: 15 Dec 2018 7:01 PM GMT)

புயல் நிவாரண நிதி வழங்குவதில் தமிழகம், புதுச்சேரியை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் மத்திய அரசு பார்க்கிறது என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திற்கு ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரபேல் போர் விமானம் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை. ராணுவ தளவாடங்கள் வாங்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது என்று கூறி உள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் சொல்லவில்லை.

கஜா புயல் நிவாரண நிதி வழக்குவதில் மத்திய அரசு புதுச்சேரி, தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் பார்க்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காங்கிரஸ் கட்சி ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story