பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உருவபொம்மை எரிக்க முயற்சி; விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கைது


பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உருவபொம்மை எரிக்க முயற்சி; விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 18 Dec 2018 7:34 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை, ப.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா அவதூறாக பேசியதாக கூறி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

 இதை தொடர்ந்து திருத்தங்கல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சிவகாசி தொகுதி பொறுப்பாளர் மனிதநேயன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 28 பேர் சிவகாசி–விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து பறித்து சென்றனர். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.


Next Story