ரூ.800 லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை ஊழியருக்கு 2 ஆண்டு ஜெயில்


ரூ.800 லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை ஊழியருக்கு 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 24 Dec 2018 11:50 PM GMT (Updated: 24 Dec 2018 11:50 PM GMT)

ரூ.800 லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை ஊழியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த ஒருவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரி தொடர்பாக விண்ணப்பம் அளித்து இருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய லஞ்சம் தர வேண்டும் என வருமான வரித்துறை ஊழியர் சந்தோஷ் சர்மா கேட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் சி.பி.ஐ. போலீசில் புகார் அளித்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் யோசனையின் பேரில் சம்பவத்தன்று அவர் சந்தோஷ் சர்மாவிடம் ரூ.800 லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் வருமான வரித்துறை ஊழியரை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு விசாரணை மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது.

இதையடுத்து ரூ.800 லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை ஊழியருக்கு 2 ஆண்டு ஜெயில், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது

Next Story