குஜிலியம்பாறை அருகே கோவில் பூட்டை உடைத்து பணம், குத்துவிளக்கு திருட்டு


குஜிலியம்பாறை அருகே கோவில் பூட்டை உடைத்து பணம், குத்துவிளக்கு திருட்டு
x
தினத்தந்தி 31 Dec 2018 3:45 AM IST (Updated: 31 Dec 2018 5:57 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே கோவில் பூட்டை உடைத்து பணம், குத்துவிளக்கு திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குஜிலியம்பாறை, 

குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டை ஊராட்சி கன்னிமார்பாளையத்தில் மாமுண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு கோவிலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

பின்னர் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் குத்துவிளக்கு, பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். மறுநாள் காலையில் சாமி கும்பிட வந்த பக்தர்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அவர்கள் வந்து பார்த்தனர். மேலும் இதுதொடர்பாக குஜிலியம்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story