மாவட்ட செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேர் கைது + "||" + 45 people arrested in the road blockade

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேர் கைது
ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு ரோடு சந்திப்பு வந்து, பின்னர் தபால் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்,

தனியார் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும் செயல்படும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், நூறு நாள் வேலை, வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தியும், இல்லையென்றால் அதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை உரியவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஜெயங்கொண்டத்தில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று அந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு ரோடு சந்திப்பு வந்து, பின்னர் தபால் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் உத்திராபதி, ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. விடுதியில் அடைத்து வைத்து 4 நாட்களாக சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது
வேளாங்கண்ணியில் விடுதியில் அடைத்து வைத்து 4 நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
2. நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது கடற்படையினர் நடவடிக்கை
நாகை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
3. பெருந்துறை அருகே பரபரப்பு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி வாலிபர் கைது
பெருந்துறை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. வினாத்தாள் கசிவு விவகாரம்; மேற்கு வங்காளத்தில் இரு மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
மேற்கு வங்காளத்தில் மாநில வாரிய தேர்வில் வினாத்தாள்களை கசிய விட்ட விவகாரத்தில் இரு மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. பொங்கலூர் அருகே, தேங்காய் வியாபாரி கொலையில் ஆசாமி கைது
பொங்கலூர் அருகே தேங்காய் வியாபாரி கொலையில் ஆசாமியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணனின் மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுக்காததால் அண்ணனுடன் சேர்ந்து கொன்றதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-