பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது கி.வீரமணி பேட்டி


பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 10 Jan 2019 11:15 PM GMT (Updated: 10 Jan 2019 6:33 PM GMT)

பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று, திருவாரூரில் கி.வீரமணி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் திராவிடர் கழக தஞ்சை, திருவாரூர் மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சாதியின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடே தவிர, வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத ஒன்று. பா.ஜனதா கட்சி தனது ஆதரவாளர்களை மகிழ்விக்கவும், ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் தோல்வியடைந்ததை சரி கட்டவும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.


கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் பா.ஜனதா கட்சிக்கு வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. கஜா புயல் பாதித்த பகுதிகளை இதுவரை ஒரு முறை கூட பிரதமர் பார்க்கவில்லை.

 பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ரே‌ஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story