மாவட்ட செய்திகள்

நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்; பெரியார் பேரவை கவர்னரிடம் மனு + "||" + We have to release 7 people including Nalini Petition to the governor

நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்; பெரியார் பேரவை கவர்னரிடம் மனு

நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்; பெரியார் பேரவை கவர்னரிடம் மனு
சிறையில் வாடும் நளினி உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் பெரியார் பேரவை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரொகித் நேற்று ராமநாதபுரம் வருகை தந்து தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசணை நடத்திய கவர்னர் இதன்பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட 72 கண்மாய் பாசன சங்கங்களின் தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தென்மண்டல தலைவர் மதுரைவீரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கடந்த 2016–ம் ஆண்டு பயிர்காப்பீடு செய்த விவசாயிகள் பலருக்கு தொகை வரவில்லை. இதேபோல, கடந்த 2017–ம் ஆண்டு நெல் விவசாயம் பாதிக்கப்பட்ட பயிர்காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. விவசாயிகள் நிலை உணர்ந்து உடனடியாக இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் கமுதி தாலுகா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டியன் அளித்த மனுவில், கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் பகுதியில் மயில்களுக்கு அரிசி மற்றும் தண்ணீர் ஆகியவற்றை உணவாக அளித்து வருகிறேன். இந்த பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட பெரியார் பேரவை சார்பில் தலைவர் நாகேசுவரன் தலைமையில் அளித்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இருந்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரொகித் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை