அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு 7–வது ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்த வேண்டும்; கூட்டு போராட்ட குழு வலியுறுத்தல்


அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு 7–வது ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்த வேண்டும்; கூட்டு போராட்ட குழு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 9:26 PM GMT)

அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கூட்டு போராட்ட குழு வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூட்டு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஒரு சட்டக்கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக்குழு மேற்பார்வையில் புதுச்சேரி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மற்ற கல்லூரிகள் சொசைட்டியின் கீழ் இயங்குகிறது.

மத்திய அரசு அறிவித்த 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை புதுச்சேரி அரசு துறை ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டது. அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் கல்லூரி பேராசிரியர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரையின் பேரில் கடந்த 2.11.2017 அன்று 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டது.

இந்த கோப்புக்கு புதுச்சேரி முதல்–அமைச்சர், அமைச்சர், தலைமை செயலாளர், துறையின் செயலாளர் நிதித்துறை, சட்டத்துறை செயலாளர்கள் ஒப்புதல் அளித்தனர். இந்த கோப்புக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த பின்னரே 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு அமல்படுத்த முடியும். எனவே தற்போது நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்து அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story