மாவட்ட செய்திகள்

வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடித்து பைனான்சியர் கொலை நண்பர்கள் வெறிச்செயல் + "||" + Financier killed near Villianur

வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடித்து பைனான்சியர் கொலை நண்பர்கள் வெறிச்செயல்

வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடித்து பைனான்சியர் கொலை நண்பர்கள் வெறிச்செயல்
புதுச்சேரி அருகே சுடுகாட்டில் பைனான் சியர் இரும்புக்குழாயால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்ததாக அவரது நண்பர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வில்லியனூர்,

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது அவருடைய மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து நண்பர்கள் கூப்பிடுகிறார்கள், பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு வெளியில் சென்றார்.


அதன் பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே வில்லியனூரை அடுத்த கோட்டைமேடு சுடுகாட்டில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. தலையில் இரும்புக் குழாயால் அடித்து அவரை கொலை செய்து இருந்தனர். உடல் அருகே செருப்புகள் சிதறிக் கிடந்தன.

இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன், மற்றும் போலீசார் விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராமலிங்கத்தின் நண்பர்கள் ராஜா, சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பைனான்சியர் ராமலிங்கத்துக்கும், ராஜாவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பகல் ராமலிங்கம் தனது நண்பர்களுடன் சினிமா படம் பார்த்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்த ராமலிங்கத்தை மதுகுடிக்க வரும்படி அழைத்து, சுடுகாட்டில் வைத்து அவரை நண்பர்களே கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து ராமலிங்கத்தின் நண்பர்கள் ராஜா (31), சபரி, சக்திவேல் (29), நடராஜன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலை நடந்த 6 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

கொலையுண்ட ராமலிங்கத்துக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த படுகொலை சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காதலியுடன் காட்டுப்பகுதியில் சென்றபோது தகராறு: என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேர் கைது
காதலியுடன் காட்டுப் பகுதியில் சென்ற என்ஜினீயரிங் மாணவரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை அண்ணன்-அண்ணி கைது
பட்டுக்கோட்டை அருகே சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன்-அண்ணியை போலீசார் கைது செய்தனர்.
3. விருதுநகர் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலை: “மகளிடம் அத்துமீறி நடக்க முயன்றதால் தீர்த்துக் கட்டினேன்” கைதான கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்
மதுரை அழகர்கோவில் அருகே ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
4. மதுரை அருகே ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலையில் கள்ளக்காதலி கைது
மதுரை அருகே அழகர்கோவில் விடுதியில் நடந்த ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கள்ளத்காதலி கைது செய்யப்பட்டார்.
5. கீரனூர் அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது
கீரனூர் அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.