புத்திரகவுண்டன்பாளையத்தில் 126 அடி உயர முருகன் சிலைக்கு வேல் பிரதிஷ்டை


புத்திரகவுண்டன்பாளையத்தில் 126 அடி உயர முருகன் சிலைக்கு வேல் பிரதிஷ்டை
x
தினத்தந்தி 20 Jan 2019 10:30 PM GMT (Updated: 20 Jan 2019 8:55 PM GMT)

புத்திர கவுண்டன் பாளை யத்தில் 126 அடி உயர முருகன் சிலைக்கு வேல் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியும், கோவில் வாசற்கால் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.

பெத்தநாயக்கன் பாளையம்,

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டன் பாளையத்தில் புதிதாக 126 அடி உயர முருகன் சிலையுடன் கூடிய முத்துமலை முருகன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு உலகிலேயே மிக உயரமான 126 அடி உயர முத்து மலை முருகன் சிலை செதுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் முருகன் சிலைக்கு வேல் பிரதிஷ்டை செய்தல் மற்றும் கோவில் வாசற்கால் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வந்தவர்களை இயற்கை மருத்துவமனை டாக்டர் செந்தில் ராஜன் வரவேற்றார். என்.எஸ். குரூப் என்.சரோஜா நடராஜன், என்.எஸ் இயற்கை மருத்துவ மனை பத்மாவதி, சத்யா ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பா ளர்களாக கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவன், தென்னை நல வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிர மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி காலை 8 மணிக்கு புத்திரகவுண் டன்பாளையம் பஸ் நிலையத் தில் இருந்து 108 பெண் பக்தர்கள் பால்குடத் துடன் யானை, குதிரை, பசு முன் செல்ல மேளதாளத்துடன் சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 9.30 மணிக்கு கோ பூஜை, அஸ்வத பூஜை, கஜ பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.

தொடர்ந்து புதிதாக செதுக்கப்பட்டு வரும், முத்து மலை முருகன் சிலை அருகே, வேல் பிரதிஷ்டை மற்றும் கோவிலுக்கு வாசற்கால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் நடந்தது. பிற்பகல் 3 மணியளவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழாவில் ஆயிரக் கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமலை முருகன் கோவில் அறக்கட் டளை நிர்வாகி என்.ஸ்ரீதர் செய்திருந்தார்.

Next Story