ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகம் முன் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகம் முன் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2019 4:15 AM IST (Updated: 23 Jan 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

சமத்துவபுரத்தில் ஏழுதேசம் பேரூராட்சி சார்பில் புதிதாக கிணறு தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகம் முன் நேற்று அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நித்திரவிளை,

நித்திரவிளை அருகே சமத்துவபுரத்தில் ஏழுதேசம் பேரூராட்சி சார்பில் புதிதாக கிணறு தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகம் முன் நேற்று அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு அனைத்து கட்சி ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தார். பா.ஜ.க.வை சேர்ந்த ரகு, கிரி பிரசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சந்தோஷ்குமார், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி பால்ராஜ், தி.மு.க. நிர்வாகி மோகன் மற்றும் தாஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சமத்துவபுரம் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 12 குடிநீர் கிணறுகளில் தற்போது 6 குடிநீர் திட்டங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. பழுதடைந்து காணப்படும் இதர குடிநீர் கிணறுகளை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் முயன்றாலே பிரச்சினை தீர்ந்து விடும். ஆனால் புதிதாக கிணறு அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும். எனவே புதிதாக கிணறு அமைக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.

Next Story