மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய நெல்லை கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி + "||" + Tuticorin Got into the Transformer Nellai college student Electricity kills

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய நெல்லை கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய நெல்லை கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி
தூத்துக்குடியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென ஏறிய நெல்லை கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
தூத்துக்குடி,

நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணநாராயணன். இவரின் மகன் காளிராஜ் (வயது 21). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி தளவாய்புரம் பகுதியில் உள்ள தனது உறவினர் மீனாட்சிசுந்தரம் வீட்டுக்கு இவர் வந்தார். மீனாட்சிசுந்தரம் தூத்துக்குடி கருத்தபாலம் பகுதியில் ஓட்டல் வைத்து உள்ளார்.


நேற்று காலையில் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கருத்தபாலம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தளவாய்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை மீனாட்சிசுந்தரம் ஓட்டினார்.

மோட்டார் சைக்கிள் மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் சென்றபோது, காளிராஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து, சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறினார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் மீனாட்சி சுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். அவர், காளிராஜின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவருடைய உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், காளிராஜ் எதற்காக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் தொழில் நெறி விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கிவைத்தார்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொழில் நெறி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதை கலெக்டர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2. நெல்லை, தென்காசியில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசியில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் பொறுப்பேற்பு
நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனராக மகேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
4. நெல்லையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம் - பணிகள் பாதிப்பு
நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.