குமரி கோவில்களில் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா சாமி தரிசனம் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு


குமரி கோவில்களில் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா சாமி தரிசனம் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா குமரி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். அப்போது திருமண அழைப்பிதழை சாமி சன்னதியில் வைத்து வழிபட்டார்.

கன்னியாகுமரி,

நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர், தொழில் அதிபர் அஸ்வின் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதற்கிடையே சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சவுந்தர்யா நேற்று கன்னியாகுமரி வந்தார். அங்கு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது திருமண அழைப்பிதழை அம்மன் காலடியில் வைத்து வழிபட்டார். தொடர்ந்து அவர் மண்டக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலிலும் தரிசனம் செய்தார். 

Next Story