மாவட்ட செய்திகள்

தந்தை இறந்த துக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை + "||" + The son committed suicide in the death of his father

தந்தை இறந்த துக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை

தந்தை இறந்த துக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை
ராமநாதபுரத்தில் தந்தை இறந்த துக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
ராமேசுவரம்,

ராமநாதபுரம் பெருங்குளம் அருகே உள்ள தெற்குவாணி வீதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62), ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்து போனார். இவரது மகன் பிரசன்னா(29). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தந்தை இறந்த தகவல் அறிந்ததும் இவர் ஊருக்கு வந்திருந்தார். தனது தந்தை மீது அதிக பாசம் வைத்திருந்த வாலிபர் பிரசன்னா துக்கம் தாங்காமல் நேற்று முன்தினம் இரவு தெற்குவாணி வீதி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் துண்டுதுண்டானது.


இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமேசுவரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாச்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த பிரசன்னாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அடுத்தடுத்து தந்தை-மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் திருமணம் செய்த 2–வது நாளில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே காதலித்து திருமணம் செய்த 2 நாட்களில் கல்லூரி பேராசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. குடும்ப பிரச்சினை காரணமாக மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
குடும்ப பிரச்சினை காரணமாக, மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
3. பரமக்குடியில் பரபரப்பு: ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை
ராமேசுவரம்– புவனேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகையால் பரபரப்பு ஏற்பட்டது.
4. மதுரையில் பரிதாபம்: கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை
சிலிண்டரில் உள்ள கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
5. ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை; சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தகவல்
‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை