மாவட்ட செய்திகள்

பெற்றோர், சகோதரர் இறந்த சோகத்தில் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவர் தற்கொலை + "||" + Parents and brother died in the tragedy Student suicide

பெற்றோர், சகோதரர் இறந்த சோகத்தில் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவர் தற்கொலை

பெற்றோர், சகோதரர் இறந்த சோகத்தில் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவர் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே பெற்றோர், சகோதரர் இறந்த சோகத்தில் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தோப்பு கொல்லி கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 17). இவர் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவரது தாய், தந்தை இறந்த நிலையில் கடந்த மாதம் அண்ணனும் இறந்து போனார். உறவினர்களை இழந்த சோகத்தில் மாணவர் காந்தி மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கவரைப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு காந்தி வந்தார். ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் நோக்கி சென்ற அவர், சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

காந்தியின் உடலை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குபேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் கவரைப்பேட்டை ரெயில் நிலையம் அருகே கிளிக்கோடியை சேர்ந்த 8–ம் வகுப்பு மாணவன் முகேஷ்(14). என்பவர் இதே பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒரு பள்ளி மாணவர் தற்போது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆரணி அருகே விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை
ஆரணி அருகே போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. மதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவம்: போலீஸ் ஏட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
மதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவமாக போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக முடிவுக்கான காரணம் குறித்து அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
3. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
செங்குன்றம் அருகே, கல்லூரி கட்டணம் செலுத்தாத விரக்தியில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால் பரிதாபம்
காதலியை திருமணம் செய்ய தன்னுடைய பெற்றோர் சம்மதிக்காததால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
5. திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் தேவகோட்டையில் பரபரப்பு
தேவகோட்டையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தால் அந்த பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.