சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் சூரிய மின்சக்தி அமைப்பு 400 யூனிட் மின்சாரம் சேமிப்பு


சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் சூரிய மின்சக்தி அமைப்பு 400 யூனிட் மின்சாரம் சேமிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2019 10:45 PM GMT (Updated: 14 Feb 2019 9:51 PM GMT)

சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் மின் சேமிப்பை கருத்தில் கொண்டு நடைமேடைகளில் உள்ள மேற்கூரைகள் மீது சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது.

சூரமங்கலம்,

சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் மின் சேமிப்பை கருத்தில் கொண்டு நடைமேடைகளில் உள்ள மேற்கூரைகள் மீது சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் மின்சாரத்தை சிக்கனம் செய்யும் முயற்சியாக 3–வது நடைமேடை மேற்கூரையில் 100 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் மாதந்தோறும் 2,400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்பு மூலம் 400 யூனிட் மின்சாரம் சேமிக்கப்படும். இதன் மூலம் 20 சதவீத மின் சேமிப்பு சிக்கனப்படுத்தப்படும்.

சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் விரைவில் சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story