தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலி: தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம்


தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலி: தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 5:07 PM GMT)

தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவவீரர்களுக்காக தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.

தஞ்சாவூர்,

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவவீரர்கள் பலியானார்கள். பலியான வீரர்களுக்கு நாடுமுழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி தஞ்சை நகர வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் காசுக்கடை வர்த்தக சங்கம் சார்பில் இறந்த ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சை திலகர் திடல் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரவை நகர தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் ரவி, மாநில துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, நகர பொருளாளர் கந்தமுருகன், தஞ்சை நகர காசுக்கடை வர்த்தக சங்க செயலாளர் சேகர் மற்றும் வணிகர் சங்கத்தினர், நகைக்கடை சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


இதே போல் ஓய்வு பெற்ற காவலர் நல சங்கம் சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி இறந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் தேவன், செயலாளர்கள் பத்மநாபன், நெல்சன், அமைப்பு செயலாளர் பக்கிரிசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டுகள் இந்திரஜித், கருணாநிதி, ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அல்மாஸ்அலி, ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் தஞ்சை மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவையினர் மாவட்ட தலைவர் ஆதிநெடுஞ்செழியன் தலைமையில் பொருளாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் குருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதே போல் இந்து அமைப்புகள் சார்பில் ரெயிலடியில் இறந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Next Story