மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க– பா.ஜ.க. முறைப்படி அமைந்த கூட்டணி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி + "||" + AIADMK - BJP Formal coalition The federal minister pon.Radhakrishnan Interview

அ.தி.மு.க– பா.ஜ.க. முறைப்படி அமைந்த கூட்டணி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

அ.தி.மு.க– பா.ஜ.க. முறைப்படி அமைந்த கூட்டணி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
அ.தி.மு.க– பா.ஜ.க. கூட்டணி முறைப்படி அமைந்துள்ள கூட்டணி என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ராமநாதபுரம்,

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் நடைபெறும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். இந்த கூட்ட ஏற்பாடுகள் குறித்து பார்வையிட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ராமநாதபுரம் வந்தார். அங்கு நடைபெறும் பணிகளை அவர் பார்வையிட்டதோடு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– மதுரை, ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர்களை சந்திப்பதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மதுரை மற்றும் ராமநாதபுரத்திற்கு வருகிறார். அவரது வருகை பா.ஜ.க.வின் வெற்றிக்கு உந்துசக்தியாக, ஊக்கப்படுத்துவதாக அமையும்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உள்ளாட்சி நிர்வாகத்திற்காக ரூ.876 கோடியும், நகர்ப்புற நிர்வாகத்திற்காக ரூ.731 கோடியும் வழங்கியுள்ளது. ஏற்கனவே ரூ.1,500 கோடி வழங்கியது. தற்போது ரூ.1,600 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு வழங்கி வருகிறது.

பா.ஜ.க–அ.தி.மு.க. கூட்டணியை கட்டாய திருமணம் என்று எதிர்கட்சிகள் விமர்சிப்பது தவறானது. அப்படி பார்த்தால் அவர்கள் தான் (தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி) ஓடிப்போய் திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் இன்னும் திருமணம் முடிந்ததாக தெரியவில்லை. உற்றாருக்கு தெரியாமல் ஊருக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்வதற்காக டெல்லி வரை ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பா.ஜ.க–அ.தி.மு.க. கூட்டணியை பற்றி பேச தகுதி அற்றவர்கள். அவர்களது கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. முறைப்படி ஒரு கூட்டணி எப்படி அமைய வேண்டுமோ அப்படி பா.ஜ.க–அ.தி.மு.க. கூட்டணி அமைந்துள்ளது.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பாணியில் சொல்வது என்றால் கள்ளத்திருமணம் என்று தான் சொல்ல வேண்டும். நரேந்திர மோடி பிரதமராக வர விரும்பி எங்களது கூட்டணிக்கு வரும் எந்த கட்சியையும் வரவேற்கிறோம். தா.மா.க.வாக இருந்தாலும் கூட்டணியில் சேர்ப்பதற்கு தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.