மாவட்ட செய்திகள்

தையல் கடையில் தீ விபத்து; துணிகள் எரிந்து நாசம் + "||" + Fire accident at the sewing store; Clothes are burning and burning

தையல் கடையில் தீ விபத்து; துணிகள் எரிந்து நாசம்

தையல் கடையில் தீ விபத்து; துணிகள் எரிந்து நாசம்
கரூரில்,தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் துணிகள் எரிந்து நாசமாகின.
கரூர், 

கரூர் வெங்கமேடு தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் அருகே சேலம் மெயின்ரோட்டில் தையல் கடை வைத்து நடத்தி வருபவர் விமல். நேற்று மாலை இவர், ஆர்டரின் பேரில் தைத்து வைத்த புது துணிகளை இஸ்திரி பெட்டி மூலம் “அயர்ன்” செய்து கொண்டிருந்தார்.

அப்போது வேலை நிமித்தமாக கடையை பூட்டி விட்டு விமல் வெளியே சென்று விட்டார். அப்போது இஸ்திரி பெட்டி “ஆப்” செய்யப்படாமல் அப்படியே வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் திடீரென இஸ்திரி பெட்டி வைக்கப்பட்டிருந்த துணி வெப்பத்தினால் கருகி தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அதில் இருந்து பரவிய தீயானது கடையில் இருந்த புது துணிகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட பொதுமக்கள், இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர்கள் விஜயகுமார், ராஜா (போக்குவரத்து) மற்றும் ரெங்கர், பெரியசாமி, சரவண

கணேஷ், இளங்கோ உள்பட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தையல் கடையின் ஷட்டரை உடைத்து திறந்தனர். அப்போது அங்கு எரிந்து கொண்டிருந்த துணிகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் துணிகள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தையல் கடையில் தீப்பிடித்து எரிந்ததை அறிந்ததும், அந்த கடையில் துணி தைக்க கொடுத்திருந்தவர்கள் பலர் திரண்டு வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ
புனே அருகே அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,அங்குள்ள கொட்டகை எரிந்து நாசமானது.
2. மூங்கில்துறைப்பட்டு அருகே, தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - ரூ.7 லட்சம் சேதம்
மூங்கில்துறைப்பட்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
3. டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. 9 மாடி தொலை தொடர்பு நிறுவன கட்டிடத்தில் பயங்கர தீ்: மொட்டை மாடியில் தவித்த 84 ஊழியர்கள் மீட்பு
மும்பையில் தொலை தொடர்பு நிறுவனத்தின் 9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மொட்டை மாடியில் சிக்கி தவித்த 84 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
5. புகைமூட்டத்தில் சிக்கியதால் உயிர் பிழைப்பதற்காக மாடி படிகளை தேடி அலைந்தோம்; பெண் ஊழியர் உருக்கம்
எம்.டி.என்.எல். அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உயிர் தப்பினர். உயிர் பிழைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.