மாவட்ட செய்திகள்

துறைமுகம் அமைக்க எதிர்ப்பு கன்னியாகுமரியில் போராட்டம் + "||" + Set the harbor Struggle in anti-Kanyakumari

துறைமுகம் அமைக்க எதிர்ப்பு கன்னியாகுமரியில் போராட்டம்

துறைமுகம் அமைக்க எதிர்ப்பு கன்னியாகுமரியில் போராட்டம்
கன்னியாகுமரியில் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த துறைமுகம் அமையும் பட்சத்தில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இந்தநிலையில், துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட மீன்தொழிலாளர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி ரவுண்டானாவில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணைதலைவர் தனிஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்பிடி தொழில் சங்க கூட்டமைப்பு தலைவர் வக்கீல் ஜெலஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

போராட்டத்தில், கன்னியாகுமரி சரக்கு பெட்டகமாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், மீன்துறை அமைச்சகத்தை சட்டப்பூர்வமாக நடைமுறை படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், எல்.ஐ.சி. ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி குழந்தைசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர், பொது செயலாளர் அந்தோணி, மாவட்ட செயலாளர்கள் அலெக்ஸ், ஜேம்ஸ், துறைமுக எதிர்ப்புகுழு ஒருங்கிணைப்பாளர் பிரபா, இணை ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் முருகேசன், வக்கீல் ராஜன் மற்றும் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைப்பு
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது.
3. பக்ரீத் பண்டிகையையொட்டி பசுவை வெட்டுவதற்கு பா.ஜனதா, இந்து முன்னணி எதிர்ப்பு
பக்ரீத் பண்டிகையையொட்டி பசுவை வெட்டுவதற்கு பா.ஜனதா, இந்து முன்னணி எதிர்ப்பு.
4. மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம்
தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக பெட்டவாய்த்தலை அருகே காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.