“எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்” பிரதமருக்கு, மு.க.அழகிரி கடிதம்


“எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்” பிரதமருக்கு, மு.க.அழகிரி கடிதம்
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் ஒன்றினை எழுதினார்.

மதுரை,

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் ஒன்றினை எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

சென்னை சென்ட்ரல் ரெயில் முனையத்திற்கு மறைந்த தமிழக முதல்–அமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டி பெருமைப்படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

இதே போல் சென்னை எழும்பூர் ரெயில் முனையத்திற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மு.கருணாநிதியின் பெயரை சூட்டிட வேண்டும் என்ற எனது அன்பு கோரிக்கையை தங்களிடம் வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story