தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’


தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’
x
தினத்தந்தி 11 March 2019 10:30 PM GMT (Updated: 11 March 2019 7:28 PM GMT)

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று முன்தினம் இரவு முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சி விளம்பர பதாகைகள் உள்பட அனைத்து விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டன. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவர்களில் அனுமதியின்றி எழுதப்பட்டு இருந்த விளம்பரங்களும் அழிக்கப்பட்டன. இதேபோல புதுக்கோட்டையில் உள்ள கலெக்டர் அலுவலக ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினார்கள். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தின் அருகே உள்ள புதுக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார், வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் பூட்டுப்போட்டு, சீல் வைத்தனர். இதேபோல திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை ஆகிய பகுதிகளில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்களையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 

Next Story