பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 7:30 PM GMT)

பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமயம்,

திருமயம் அருகே சந்தனவிடுதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 150 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு சந்தனக்கம்மாய், கூத்தூரணி, இலுப்பகுளம் உள்ளிட்ட சிறிய குளங்கள் உள்ளது. இந்த குளங்களில் உள்ள நீரை வைத்துதான் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். ஆனால் இந்த குளங்களுக்கு வரும் நீரை வரவிடாமல் நடு குளத்தில் சாலை அமைத்தும், வாய்க்காலை அடைத்தும், குளங்களை அசுத்தம் செய்து தனியார் கிரஷர் ஆலை ஒன்று ஆக்கிரமித்து வருகிறது. மேலும் இவர்கள் கல் உடைக்க வைக்கும் வெடியால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் விழுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கிராமமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள னர். இந்நிலையில் கிரஷர் உரிமையாளர்கள் குளத்தில் ஆக்கிரமித்துள் ளதை அகற்றி, குளத்தை அசுத்தம் செய்யாமல் இருக்க தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திருமயம் அருகே உள்ள சந்தனவிடுதி கிராமமக்கள் நேற்று காலை புதுக்கோட்டை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட னர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை- மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story