மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக முற்றுகை போராட்டம் 27 பேர் கைது + "||" + 27 people arrested in the Nagarkovil highway office blockade protest

நாகர்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக முற்றுகை போராட்டம் 27 பேர் கைது

நாகர்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக முற்றுகை போராட்டம் 27 பேர் கைது
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.
நாகர்கோவில்,

நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பசுமை தீர்ப்பாய தீர்ப்பின்படி குளங்கள், வாய்க்கால்களின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும், குளங்களில் சாலைக்காக நிரப்பிய மண்ணை உடனே அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபாவும் (பாசனத்துறை), குமரி மாவட்ட விவசாய அமைப்புகளும் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-விடுதலை) இணைந்து நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.


போராட்டத்தில் மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, மாநில நிர்வாகி சங்கரபாண்டியன், பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், சுசீலா, ஸ்ரீகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 27 பேர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் கே.பி.ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆட்டோ டிரைவர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை: தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது
நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
2. தூத்துக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் கொலையில் 5 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
தூத்துக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3. சீர்காழி, செம்பனார்கோவில் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்த 3 பேர் கைது
சீர்காழி, செம்பனார்கோவில் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
4. நாகர்கோவில் இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
நாகர்கோவில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
5. மூலனூர் பகுதிகளில் வழிப்பறி,திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி மற்றும் வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடைக்காரரையும் போலீசார் கைது செய்தனர்.