முகநூலில் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: கோலட்டி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்


முகநூலில் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: கோலட்டி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 31 March 2019 10:15 PM GMT (Updated: 31 March 2019 6:57 PM GMT)

முகநூலில் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய கோலட்டி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கோலட்டி ஊராட்சி செயலாளராக தர்மராஜா இருந்து வந்தார். இவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தி.மு.க. குறித்தும் முகநூலில் விமர்சனம் செய்து வந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் தர்மராஜா தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவுப்படி தளி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசசேகர் கோலட்டி ஊராட்சி மன்ற செயலாளர் தர்மராஜாவை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதன் பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story