கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க விவசாயிகள் மனு


கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 1 April 2019 11:00 PM GMT (Updated: 1 April 2019 8:48 PM GMT)

கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள வீரவல்லி, ஐநூற்றுமங்கலம், சீகம்பட்டி, கண்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி குளித்தலை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டம், மாயனூரில் உள்ள தடுப்பணையில் இருந்து பிரியும் கட்டளை மேடு, தென்கரை ஆகிய வாய்க்கால் பாசனம் மூலம் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றோம். ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் இந்த வாய்க்கால் தண்ணீரை நம்பி பயிரிடப்படுகின்றனர்.

தற்போது வாய்க்காலில், தண்ணீர் அடைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் இல்லாமல் எங்கள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகும் நிலையில் உள்ளது. பயிர்கள் முற்றிலும் கருகினால் விவசாயிகள் பெரிதும் நஷ்டத்திற்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே கருகிவரும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கவேண்டும்

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். 

Next Story