மாவட்ட செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டல் சிறுமி தற்கொலை முயற்சி; தொழிலாளி கைது + "||" + Threat pornography Child suicide attempt Worker arrested

பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டல் சிறுமி தற்கொலை முயற்சி; தொழிலாளி கைது

பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டல் சிறுமி தற்கொலை முயற்சி; தொழிலாளி கைது
பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் சிறுமி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி,

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாதிக் அலி மகன் முகமது சுல்தான் சபீக் (வயது 24). தற்போது இவர் திருப்பூர் கே.எஸ்.சி பள்ளி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் 15 வயது சிறுமி ஒருவரும் வேலை செய்து வந்தார்.

அந்த சிறுமியிடம் நெருங்கி பழகிய முகமது சுல்தான் சபீக் தான் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார். இதை நம்பிய அந்த சிறுமியும் அவருடன் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை முகமது சுல்தான் சபீக் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி பலமுறை அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அந்த சிறுமி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். பின்னர் அவரை காப்பாற்றிய பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது அவர் கண்ணீர்மல்க நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முகமது சுல்தான் சபீக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பொங்கலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் நகை பறிப்பு
பொங்கலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
2. பவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
பவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
3. ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்
ராஜஸ்தானில் கணவர் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
4. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.
5. மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு செல்வோம்; வாடகைக்கு குடியிருப்போர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு செல்வோம் என்று திருப்பூர் பாளையக்காடு பகுதியில் வாடகைக்கு குடியிருப்போர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.