புதுக்கோட்டையில் துணை ராணுவத்தினர்-போலீசார் கொடி அணிவகுப்பு


புதுக்கோட்டையில் துணை ராணுவத்தினர்-போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 14 April 2019 10:45 PM GMT (Updated: 14 April 2019 8:51 PM GMT)

தேர்தல் பணிக்காக வந்துள்ள துணை ராணுவத்தினர், புதுக்கோட்டை மாவட்ட போலீசாருடன் இணைந்து நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஒடிசாயை சேர்ந்த துணை ராணுவத்தினர் சுமார் 180 பேர் கமாண்டர் எஸ்.கே.சிங் தலைமையில் புதுக்கோட்டைக்கு நேற்று வந்தனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட போலீசாருடன் இணைந்து புதுக்கோட்டையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ஒடிசா துணை ராணுவ கமாண்டர் எஸ்.கே.சிங் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மச்சுவாடியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, கீழ ராஜ வீதி, பிருந்தாவனம் முக்கம், அண்ணா சிலை, பழைய பஸ் நிலையம் வழியாக பொது வளாகத்திற்கு வந்து நிறைவுபெற்றது. இந்த கொடி அணிவகுப்பில் ஒடிசா துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி வந்தனர்.

பாதுகாப்பு பணியில்...

இதில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் சுமார் 550-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பு முடிந்தவுடன் ஒடிசா சிறப்பு காவல் படையினர் 3 குழுவாக பிரிந்து அறந்தாங்கி, விராலிமலை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் இனி ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பின்னர் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து செல்லும்போதும், வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணும் மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story