திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றை தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றை தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 April 2019 4:15 AM IST (Updated: 17 April 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் நகரின் மையப்பகுதியில் செல்லும் ஓடம்போக்கி ஆற்றுக்கு தனி சிறப்பு உண்டு. நாகப்பட்டினத்தில் துறைமுகம் இருந்த ஒரு காலத்தில் ஓடம் மூலம் வணிகம் இந்த ஆற்றில் நடைபெற்றுள்ளது. ஓடம் சென்ற ஆறு என்பதால் காலப்போக்கில் ஓடம்போக்கி ஆறு என பெயர் பெற்றது.

இந்த ஆறு தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆதலால் ஆற்றில் காட்டாமணக்கு செடிகள், நாணல்கள் உள்ளிட்ட தேவையற்ற செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.

தூர்வார வேண்டும்

அதிலும் குறிப்பாக நகர் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் தேவையற்ற செடிகள் வளர்ந்து உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயநிலையும் நிலவுகிறது. மேலும் கடைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஆற்றில் தான் கலக்கிறது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், இந்த ஆற்றை உடனடியாக தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story