மாவட்ட செய்திகள்

வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது + "||" + Two people have been arrested for attacking a farmer in the disputed road near Valangaiman

வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது

வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது
வலங்கைமான் அருகே வயலுக்கு செல்லும் பாதை தகராறில் விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியை அடுத்த சோத்திரியம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் அருகருகே நிலங்கள் உள்ளன. இதில் சாகுபடி மற்றும் அறுவடை காலங்களில் வயல் பகுதிக்கு சென்று வரும் பாதை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்திக்கும் முனியாண்டிக்கும் பாதை தகராறு ஏற்பட்டது.

இதில் ஏற்பட்ட தகராறில் முனியாண்டியின் மகன்கள் பாண்டியன் (55), குருமூர்த்தி (47) ஆகியோர் கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் மணிகண்டன் (35) வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியன், அவருடைய தம்பி குருமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பாண்டியனின் மகன் கார்த்தி (24) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல்லில் தடைசெய்யப்பட்ட ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
நாமக்கல்லில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சாவு; 4 பேர் கைது
ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான டி.கே.சிவக்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு - டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
4. வாலிபர் மீது தாக்குதல் - வேளாண்மை உதவி இயக்குனர் கைது
ஓமலூர் அருகே, வாலிபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
5. ஆந்திர பிரதேசம்: பைக் திருட்டு கும்பல் கைது, 130 வாகனங்கள் மீட்பு
ஆந்திர பிரதேசத்தில் நீண்ட காலமாக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை