தொழிலாளியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் அபேஸ்


தொழிலாளியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 25 April 2019 3:00 AM IST (Updated: 24 April 2019 5:00 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.

வேலூர், 

வேலூர் கொணவட்டம் தேவிநகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனம், தொழிலாளி. இவர், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

நான் வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். இந்த வங்கிக்கணக்கில் இருந்து 19–ந்தேதி ரூ.16 ஆயிரத்து 200 எடுக்கப்பட்டதற்கான தகவல் வந்தது. இதுபற்றி நான் வங்கிக்குச் சென்று கேட்டபோது, அவர்கள் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் நான் எதுவும் வாங்கவில்லை. ஏ.டி.எம். கார்டு என்னிடம் தான் உள்ளது. மர்மநபர்கள் யாரோ ஆன்லைன் மூலமாக எனது பணத்தைத் திருடி விட்டனர். எனவே எனது பணத்தைத் திருடிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


Next Story