கோட்டூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது


கோட்டூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2019 3:45 AM IST (Updated: 26 April 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

கோட்டூர்,

கோட்டூர் அருகே கெழுவத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் பெருகவாழ்ந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாதன் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் மணல் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் லாரி டிரைவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை ராயம்பட்டியம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 54), முத்துபேட்டை கோசகுலத்து தெருவை சேர்ந்த பிரசாந்த் (24) ஆகிய 2 பேர் என்பதும், இவர்கள் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ஆல்பர்ட், பிரசாந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

Next Story