மாவட்ட செய்திகள்

மகள் தற்கொலைக்கு காரணமான அரசு பஸ் கண்டக்டரை கழுத்தை அறுத்து கொன்ற ஆட்டோ டிரைவர் போலீசார் கைது செய்தனர் + "||" + Auto driver arrested for slapping body collapses

மகள் தற்கொலைக்கு காரணமான அரசு பஸ் கண்டக்டரை கழுத்தை அறுத்து கொன்ற ஆட்டோ டிரைவர் போலீசார் கைது செய்தனர்

மகள் தற்கொலைக்கு காரணமான அரசு பஸ் கண்டக்டரை கழுத்தை அறுத்து கொன்ற ஆட்டோ டிரைவர் போலீசார் கைது செய்தனர்
மகள் தற்கொலைக்கு காரணமான அரசு பஸ் கண்டக்டரை கழுத்தை அறுத்து கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். அரசு பஸ் கண்டக்டர். இவர் விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார்.

இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி இறந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஏழுமலையின் மகள் ஆனந்தவள்ளிக்கும், குமரவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.


கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குமரவேலும், ஆனந்தவள்ளியும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆனந்தவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, குமரவேலை தீர்த்து கட்ட திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் விருத்தாசலத்தில் குமரவேலும், ஏழுமலையும் நேற்று இரவு மது குடித்துள்ளனர். மதுபோதை ஏறியதும் ஏழுமலை, குமரவேலின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர் தனது ஆட்டோவில் குமரவேலின் உடலை ஏற்றி செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுரங்கத்திற்கு எதிரே போட்டுவிட்டு மீண்டும் தனது ஊருக்கு வந்தார். அப்போது விருத்தாசலத்தில் போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆட்டோவில் ரத்தக்கறை இருந்ததையடுத்து சந்தேகத்தின்பேரில் ஏழுமலையை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் குமரவேலை கொலை செய்ததை தெரிவித்தார்.

பின்னர் கொலை சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் போலீசார் செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விரைந்து சென்று குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் கொலை செய்த ஆட்டோ டிரைவர் ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையின்போது, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான குமரவேலை பழிக்குப்பழியாக குமரவேலுவை கொன்றதாக போலீசாரிடம் ஏழுமலை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - வாலிபர் கைது
சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற, விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
அரக்கோணம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
3. சேர்ந்து வாழ மறுத்த பெண் கொலை: முன்னாள் கவுன்சிலருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த பெண்ணை கொன்ற முன்னாள் கவுன்சிலருக்கு தஞ்சை கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4. கேலி செய்ததை கண்டித்ததால் தீர்த்து கட்டினேன் முதியவர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்
கேலி செய்ததை கண்டித்ததால் தீர்த்து கட்டினேன் என்று முதியவர் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
5. தண்டவாளம் அருகே சிதைந்து கிடந்த பெண் உடல்: தற்கொலையா-கொலையா? போலீசார் தீவிர விசாரணை
தண்டவாளம் அருகே சிதைந்த நிலையில் பெண் உடல் கிடந்தது. அவர் தற்கொலை செய்தாரா அல்லது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.