மத்திய அரசு நடத்தும் தொழில் பழகுனர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசு நடத்தும் தொழில் பழகுனர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 7:46 PM GMT)

மத்திய அரசு நடத்தும் தொழில் பழகுனர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மத்திய அரசு வழங்கும், தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் பெறும் பொருட்டு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) குறிப்பிட்ட தொழிற் பிரிவுகளில் பயின்று தேசிய சான்றிதழ் பெற்றவர்கள் இதே பிரிவில் தனிநபராக அகில இந்திய தொழில் பழகுனர் தொழிற் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். எனவே ஐ.டி.ஐ-யில் படித்து தேசிய தொழில் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், தொழில் பழகுனர் பயிற்சியை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழில் பழகுனர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் நேரடியாக குறைந்தபட்சம் அனுபவம் பெற்றவர்கள், மத்திய அரசின் தொழில் பழகுனர் சான்றிதழ் பெற விருப்பம் உள்ளவர்கள் தனி விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அட்டவணைப்படி பணியாளர்களுக்காக மத்திய அரசு நடத்தும் தொழில் பழகுனர் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம்.

செய்முறை தேர்வு

அதற்கான ஆன்லைன் தேர்வுகள் வருகிற 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும், பாடவாரியான எழுத்து தேர்வுகள் அடுத்த மாதம் (ஜூன்) 11-ந் தேதி பொறியியல் வரைபடம் காலை 9.30 மணிக்கும், ஜூன் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி காலை 9.30 மணிக்கும் செய்முறை தேர்வு நடைபெறும். பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகம் முதல் தளத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு மேலும் விவரம் அறியலாம். தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் தொழில் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும்.விண்ணப்பங்களை மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனரை அணுகி பெற்று தட்டச்சு செய்து விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண்ணான 04328-225532 என்ற எண்ணில் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story