மாவட்ட செய்திகள்

“இந்து மத அடையாளங்களை அழிப்பதற்கு தேர்தலை பயன்படுத்துகிறார்” கமல்ஹாசன் மீது, எச்.ராஜா குற்றச்சாட்டு + "||" + "Uses Election to Destroy Hindu Religious Identities" on Kamal Haasan, H. Raja's charge

“இந்து மத அடையாளங்களை அழிப்பதற்கு தேர்தலை பயன்படுத்துகிறார்” கமல்ஹாசன் மீது, எச்.ராஜா குற்றச்சாட்டு

“இந்து மத அடையாளங்களை அழிப்பதற்கு தேர்தலை பயன்படுத்துகிறார்” கமல்ஹாசன் மீது, எச்.ராஜா குற்றச்சாட்டு
இந்து மத அடையாளங்களை அழிப்பதற்கு கமல்ஹாசன் தேர்தலை பயன்படுத்துகிறார் என பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.
கும்பகோணம்,

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் கூறி உள்ளார். இவ்வாறு கூறி விட்டு அவர் எப்படி தன்னை இந்து என கூற முடியும்? இதில் உள்நோக்கம் உள்ளது.

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் திட்டமிட்டு பேசி உள்ளார். இந்து என்ற அடையாளம் தேவையில்லை என்பதற்காக கமல்ஹாசன் இப்படி பேசி உள்ளார். அவர் இந்து மதத்தை பற்றி பேசியதில் மிகப்பெரிய சதி உள்ளது.


அழிப்பதற்காக...

இந்து மத அடையாளங்களை அழிப்பதற்காக கமல்ஹாசன், தேர்தலை பயன்படுத்துகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவை பற்றியும், இந்து மதத்தை பற்றியும் உலக அளவில் பெருமிதமாக பேசி வருகிறார்கள். இந்து மதம் அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்லும் மதம் என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலுக்கு எச்.ராஜா தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்று சிறப்பு யாக பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் கலெக்டர் டி.ரத்னா பேட்டி
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.ரத்னா தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
3. நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் வானதி சீனிவாசன் பேட்டி
நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
4. சிலை திருட்டுக்கும், கலைக்கூடத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை பொன்மாணிக்கவேல் பேட்டி
சிலை திருட்டுக்கும், கலைக்கூடத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார்.
5. ‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...