அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 May 2019 10:30 PM GMT (Updated: 23 May 2019 8:11 PM GMT)

புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை,

அரசு இசைப்பள்ளியில் இந்த ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7-ம் வகுப்பு தேர்ச்சியும், நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்கவும் வேண்டும். 12 வயது முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். பயிற்சி கட்டணம் ரூ.152 ஆகும்.

ஊக்கத்தொகை

அரசு சான்றிதழ் படிப்பான இந்த பயிற்சியில் அரசு துறையில் வேலை வாய்ப்புகளும் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நிகழ்ச்சி வழங்க வாய்ப்புகளும் மற்றும் இலவச பஸ் சலுகை, தங்கும் வசதி மற்றும் கல்வி உதவித்தொகை அரசு விதிகளுக்குட்பட்டு வழங்கப் படும்.

மேலும் மாணவர்களுக்கு சீருடை, காலணி, மிதிவண்டி அரசு விதிகளின்படி வழங்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரில் அணுகவும். மேலும் விவரங்களுக்கு 04322-225575, 94861 52007 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story