ரெயில்வே துறையை கண்டித்து உண்ணாவிரதம்
அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தென்னக ரெயில்வே துறையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அரியலூர்,
அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தென்னக ரெயில்வே துறையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து பயணிகள் ரெயிலையும் முதல் நடைமேடையில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுத்தப்பட்ட திருச்சி, பெங்களூரு, சென்னை, கொல்லம் விரைவு ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். திருச்சி- விழுப்புரம் இடையே பகலில் மின்சார ரெயில் இயக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பிட வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் நகர தலைவர் சந்திரசேகர், துணை தலைவர் செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story