தஞ்சையில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தஞ்சையில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை புதுப்பட்டினம் அருகே உள்ளது கோரிகுளம். இங்குள்ள புதுத்தெருவில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் பணி நடைபெறும் இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் கோபுரம் அமைக்க கூடாது என கையெழுத்திட்டு தஞ்சை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு அளித்தனர்.
அமைக்கக்கூடாது
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் அதில் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக புற்றுநோய், ஒலிமாசு, நோய் எதிர்ப்புத்திறன் குறைவு, குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கால்நடைகள், பறவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது”என்றனர்.

Related Tags :
Next Story