கீழ்வேளூர் பகுதியில் மத்திய விரைவு அதிரடி படையினர் ஆய்வு


கீழ்வேளூர் பகுதியில் மத்திய விரைவு அதிரடி படையினர் ஆய்வு
x
தினத்தந்தி 21 July 2019 10:45 PM GMT (Updated: 21 July 2019 6:58 PM GMT)

கீழ்வேளூர் பகுதியில் மத்திய விரைவு அதிரடி படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கீழ்வேளூர்,

மதக்கலவரம், சாதி மோதல்கள், இயற்கை சீற்றங்கள் ஏற்படும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கான மத்திய அரசின் ஒரு பிரிவான விரைவு அதிரடி படையின் துணை கமாண்டர் சிங்காரவேல் தலைமையில் 46 பேர் நேற்று முன்தினம் நாகைக்கு வந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரனை சந்தித்து மாவட்டத்தில் பார்வையிட வேண்டிய இடங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

நேற்றுமுன்தினம் விரைவு அதிரடி படையினர் நாகை நகர போலீஸ் நிலையம் மற்றும் நாகூர் போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் குறித்து தகவல்களை சேகரித்தனர்.

ஆய்வு

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் கைதிகளின் அறை, போலீசார் குடியிருப்பு, போலீசாரின் அறைகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவில், சிக்கல் சிங்காரவேலர் கோவில் உள்ளிட்ட கோவில் களில் அதிவிரைவு படை யினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story